அக்குபங்க்சர் மருத்துவர்

  அனைவருக்கும் காலை வணக்கம்.

இன்றுன் ஜூன் 14 "உலக இரத்ததான தினம்" உங்கள் உடலை பேணி ஒரு உயிரை காப்பாற்றுங்கள்.

                                                                                            இரத்த தானம்

தானங்களில் பல வகைகள் உண்டு. உதாரணத்திற்கு  அன்னதானம், கோதானம், பூமிதானம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் ஒரு உயிரை காப்பாற்றும் ஒரே தானம் "இரத்த தானம்" மட்டும் தான். உண்மையிலேயே தானங்களில் சிறந்தது இரத்த தானம் தான்.

ஒவ்வொரு முறை இரத்த தானத்திலும் நீங்கள் ஒரு உயிரை காப்பாற்றுகிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

நாம் இரத்த தானம் யார் கொடுக்கலாம், யார் கொடுக்ககூடாது, அதனால் கொடுப்பவர்களுக்கு என்ன பலன் என்று இப்போது பார்ப்போம்.

யார் இரத்த தானம் செய்யலாம்?
 • 18 வயது முதல் 60 வயது வரை உடல் ஆரோக்கியத்துடனும், நல்ல பழக்க வழக்கங்கள் உள்ள ஆண், பெண் இருபாலரும் 450 மி.லி. இரத்த தானம் செய்யலாம்.
 • உடல் எடை 45 கிலோ அதற்கு மேல் உள்ளவர்கள் இரத்த தானம் செய்யலாம்.
 • இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராம் % அதிகம் உள்ளவர்கள் இரத்த தானம் செய்யலாம்.
 • இரத்த அழுத்தம் நோய் இல்லாதவர்கள் இரத்த தானம் செய்யலாம்.
 • இரத்த தானம் ஆண்கள் 3 மாத இடைவெளியிலும் பெண்கள் 4 மாத இடைவெளியிலும் செய்யலாம்.

யார் இரத்த தானம் செய்யக்கூடாது?
இங்கு ஒரு சில குறிப்புகள்:

 •   இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள்.
 •   மது அருந்தியவர்கள், போதை பழக்கம் உள்ளவர்கள்.
 •   18 வயதிற்கு கீழும் 60 வயதிற்கு மேலும் உள்ளவர்கள். உடல் எடை 45 கிலோவிற்கு குறைவாக உள்ளவர்கள்.
 •   இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராம் % க்கு குறைவாக இருப்பவர்கள்.
 •   மஞ்சள் காமலை நோயில் பாதிக்கப்பட்டவர்கள்.
 •   இருதயநோய், சிறுநீரகநோய், சர்க்கரை நோய், தைராய்டு நோய் உள்ளவர்கள்.
 •   பெண்கள் கருவுற்றிருக்கும்போதும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்   காலங்களிலும் இரத்ததானம் செய்யக்கூடாது.
 •   எஸ்.ஐ.வி. எய்ட்ஸ், பால்வினை நோய், உள்ளவர்கள்.

               இரத்த தானம் செய்பவர்களுக்கு ஏற்படும் நல்ல விளைவுகள்:

1. இரத்த தானம் செய்வதால் ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு குறைவு.

2. இரத்த தானம் செய்வதால் புற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.

3. கொலஸ்ட்ராலை குறைத்து இரத்த அழுத்த நோய் வராமல் பாதுகாக்கும்.

4. உடலில் நல்ல கொழுப்பு அதிகரித்து உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும்.

5. இரத்த தானம் செய்வதால் உடலில் கூடுதலாக புதிய இரத்த அணுக்கள் உருவாகும்.

6. இரத்த தானம் செய்வதால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் ஆரோக்கியமாக
    இருக்கும்.

7. இரத்த தானம் செய்வதால் ஒரு உயிரை காப்பாற்றிய மன நிறைவு கிடைக்கும்.

                                      டாக்டர். ப.சிவஞானம்.M.D(Acu).Ph.D.

                             அக்குபங்க்சர் மருத்துவர், "குமரன் ஹெல்த் செண்டர்"
                    புதிய எண்- 216, பவர் ஹவுஸ், கோடம்பாக்கம், சென்னை-600024.
                 (பவர்ஹவுஸ் பஸ் ஸ்டாப் அருகில்/ இந்தியன் ஓவர்ஸீஸ் பாங்க் அருகில்)
                                          தொடர்பு எண்:
9444391909/9445066438.

                           Consultation: Monday-Saturday 5pm-8pm/Sunday on appointment.

                                  இமெயில்: ps.sivagnanam@gmail.com / ps@guruaam.com
                                                                            வெப்சைட்: www.guruaam.com

 


Comments
Leave a Reply