"நோய் நீக்கும் மருந்தில்லா மருத்துவம்" என்ற இந்த நூலில் 16 வகையான நோய்களுக்கு இயற்கை முறையில் நோயிலிருந்து நிவாரணம் பெற மருந்து  மாத்திரைகள் இல்லாமல் ஆரம்ப காலத்திலேயே நோய்களிலிருந்து எப்படி
பாதுகாத்துக் கொள்ளலாம்?. ஒவ்வொரு நோய்களிலிருந்தும் விடுபட என்ன உணவுகளை சாப்பிடலாம்?. இயற்கை மருத்துவம் என்ன?. எந்த யோகாசனம் செய்யலாம்?. என்ன முத்திரை பயிற்சி செய்தால் அந்த நோய்கள் தீரும்?. அந்த
நோய்களுக்கு அக்குபிரசர் மருத்துவம் என்ன? என்று விரிவாக இந்த நூலில் பட விளக்கங்களுடன் கூறப்பட்டுள்ளன.

இந்த “நோய் நீக்கும் மருந்தில்லா மருத்துவம்” நூலை படித்து அனைவரும் நோயில்லாமல் வாழ வாழ்த்துக்கள்.
 
"சக்தி முத்திரைகள்" என்ற இந்த நூலில் 50 சக்தி முத்திரைகளை பட விளக்கங்களுடன், முத்திரை செய்முறை, முத்திரை பயிற்சியால் ஏற்படும் நல்ல விளைவுகள் அதாவது ஒவ்வொரு முத்திரை பயிற்சியின் போதும் என்ன நோய்கள் குணமடைகின்றன என்ற முழு விவரங்கள் கூறப்பட்டுள்ளன. இந்த முத்திரை நூலை படித்து அனைவரும் நோயில்லாமல் ஆரோக்கியத்துடனும் சக்தியுடனும் வாழ வாழ்த்துக்கள்.
 
Picture
Benefits of Paschimottanasana:
 • While practicing this Paschimottanasana the intestines, gall bladder are smoothly pressed and stimulates well.
 • The soul energy of the body will be strengthening by spinal cord, spinal nerves are pulled during the time of asana.
 • It prevents diabetes. It increases the fertility factor of male removes the infertility.
 • Stomach pain, headache, piles, hip pain, back pain and body weakness are cured by doing this asana.
 • The menstrual problem will be cured for the ladies. Hip bones will become strengthen.
 • For women can do this asana before marriage can give birth from normal delivery by strengthening their bones and inner reproductive organs.
 • This asana helps to increase the concentration capacity.
Warning:
The people should avoid this asana who had the operation in their stomach recently. They must get the proper advice from the yoga trainers after a particular time period. The pregnant ladies who is having experience by doing yoga can proceed this asana up to the sitting pose with the stretched hands beside their ears. They should not bend their body for touching the feet. The beginners who are in pregnant should not do this asana. 
 
Diabetes natural cure by Acupressure, Yoga, Mudra, Home Remedies

Picture
Click to view large
Picture
Click to view large
 
Picture
அஞ்சலி முத்திரை (ANJALI MUDRA)
(நம்மை யாரும் வசியப்படுத்த முடியாது).

அஞ்சலி முத்திரை செய்முறை பயிற்சி
:
நமது இரு கைகளையும் ஒன்று சேர்த்து இரண்டு உள்ளங்கைகளும் ஒன்றை ஒன்று தொடுமாறு வைத்துக்கொள்ளவேண்டும். கை விரல்களையும் ஒன்று சேர்த்து வைத்துக்கொள்ளவும். இரண்டு பெருவிரல்களும் மார்புப் பகுதியைத் தொடவேண்டும். வலது கை விரல்கள் இடது கை விரல்களை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். இரண்டு கைகளையும் ஒன்றுசேர்க்கும்போது சிறிது இடைவெளி இருக்கவேண்டும். தலையை சிறிது தாழ்த்தி கண்களை மூடியபடி இருக்கவேண்டும்.

அதாவது இறைவனை வணங்கும்போதும் பெரியவர்களைப் பார்த்து வணங்கும் போதும் இந்த முத்திரையினால் தான் செய்வோம்.

இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் எவ்வளவு நேரமும் செய்யலாம். இந்த முத்திரையை நெஞ்சுக்கு நேராக வைத்துக்கொண்டு  முத்திரை பயிற்சி செய்யும்போது கண்களை மூடிக்கொண்டு மூச்சை நன்றாக இழுத்து வெளியே விடவேண்டும். மனம் அமைதி பெறும். உடலுக்கு புத்துணர்ச்சியும் சக்தியும் கிடைக்கும். சில நிமிடங்கள் செய்தாலே இது நல்ல பலன் கொடுக்கும்.

அஞ்சலி முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்

•    இந்த முத்திரையின் போது நமது நல்ல எண்ணங்களையும் மற்றவர்களிடம் மரியாதையையும் காட்டுகிறது.
•    இந்த முத்திரையை நமது இதயத்திற்கு நேராக வைத்து செய்தால் நமது மனம் அமைதி பெறும்.
•    நமது மூளையின் இருபக்கமும் அதாவது வலது இடது பக்க மூளைகளும் அமைதி பெறும்.
•    நமது நேர்மையான ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
•    மன அழுத்தம் குறையும்.
•    உடலின் செயல் திறன், கற்பனைத் திறன் சிறப்பாக செயல்பட்டு புதிய படைப்புகளை உருவாக்கும் ஆற்றல் உண்டாகும்.
•    நம்மை யாரும் வசியப்படுத்த முடியாது.
•    அனைவரும் நம்மிடம் அன்பாக பழகுவார்கள்.
•    இறைவனை வணங்கும்போது இந்த முத்திரையில் தான் வேண்டிக்கொள்கின்றோம்.
•    இந்த முத்திரை இறைவனுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிக்கின்றது.
•    இந்த முத்திரை பெரியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வணக்கத்தையும் அவர்களால் ஏற்பட்ட நன்மைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைகிறது.
•    விரல் நுனிகள் அழுத்தத்துடன் தொடுவதால் நமது உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.
•    இந்த முத்திரை பயிற்சியால் நமது உறவினர்களிடம் மகிழ்ச்சியான உறவும் நல்ல நண்பர்களின் தொடர்பும் அதிகரிக்கிறது.
•    நமது உள்ளங்கைளில் உடல் உறுப்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகள் இருக்கிறது. அதை அழுத்தும்போது உடல் உறுப்புகள் அனைத்தும் சக்தி பெறுகிறது.
•    அனைவரிடமும் மனிதநேயம் நன்றாக ஏற்பட்டு மற்றவர்கள் துன்பப்படும்போது இரக்க உணர்வுடன் உதவும் எண்ணம் மனதில் தோன்றுகிறது.

நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம்.
நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது.

Picture
வஜ்ர முத்திரை (VAJRA MUDRA)
(வயிறு, மண்ணீரல், கணையம் அதிக சக்தி பெறுகிறது)

வஜ்ர முத்திரை செய்முறை பயிற்சி:
நமது பெருவிரலின் நுனி நடுவிரல் நுனியையும், மோதிர விரல் நுனி நடுவிரல் நுனியையும், சிறு விரல் நுனி  மோதிர விரல் நுனியையும் தொட்டுக்கொள்ளவேண்டும். ஆள்காட்டி விரல் வளையாமல் நேராக நீட்டிக்கொள்ளவேண்டும். படத்தில் பார்க்கவும்.

இது இந்திரனின் கையில் உள்ள வஜ்ராயுதம் போல் காணப்படும். அதனால் இதை வஜ்ர முத்திரை என்று அழைக்கப்படுகிறது.

இந்த முத்திரை பயிற்சியை குறைந்த பட்சம் 5 நிமிடங்களும் அதிக பட்சம் 45 நிமிடங்கள் வரை செய்யலாம். எந்த நேரத்திலும் செய்யலாம். செய்து முடித்த பிறகு தலையின் முன் பக்கம் பின் பக்கம், கழுத்துப்பகுதி, பிடரி, இலேசாக அழுத்தத்துடன் தடவிக்கொடுக்கவேண்டும்,.

வஜ்ர முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்
 • உடல் உள் உறுப்புகளான வயிறு, மண்ணீரல், கணையம் அதிக சக்தி பெறுகிறது.
 • உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
 • இதயத்திற்கு அதிக இரத்த ஓட்டம் செலுத்தப்படுவதால் இதயத்திற்கு அதிக சக்தி கிடைக்கிறது.
 • வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.
 • குறைந்த இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் இந்த முத்திரை பயிற்சி செய்தால் நோய் குணமாகும்.
 • மன அமைதி உண்டாகும்.
 • தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் குணமாகும்.
 • தீய பழக்கங்கள் அதாவது புகை பிடித்தல், மது பழக்கம், புகையிலை உபயோகித்தல் நாளடைவில் படிப்படியாக குறைந்து அதிலிருந்து விடுபடுவார்கள்.
 • இரத்த ஓட்டம் நன்றாக இருப்பதால் உடல் உறுப்புகள் செயல்பாடுகள் நன்றாக செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
 • மன அழுத்தம் குறையும்.
 • அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த முத்திரை பயிற்சி செய்யக்கூடாது.

நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம்.
நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது.

Picture
மூட்டு முத்திரை (JOINT MUDRA)

மூட்டு முத்திரை செய்முறை பயிற்சி

நமது வலது கை பெருவிரல் நுனியும் மோதிர விரல் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளவேண்டும். அதேபோல் நமது இடது கை பெருவிரல் நுனியும் நடுவிரல் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளவேண்டும். இதற்கு மூட்டு முத்திரை அல்லது ஜாயிண்ட் முத்திரை என்று பெயர்.

இந்த முத்திரை பிரித்வி முத்திரை மற்றும் ஆகாஷ் முத்திரைகளின் பலன்களை கொடுக்கிறது.

இந்த முத்திரையை எந்த நிலையிலும் செய்யலாம். உட்கார்ந்து கொண்டோ, நின்றுகொண்டோ, நடந்து கொண்டோ செய்யலாம்.
இரண்டு கைகளிலும் செய்யவேண்டும். மூச்சுப்பயிற்சி நன்றாக இருக்கவேண்டும். சீரான சுவாசம் அவசியம். குறைந்தது 15 நிமிடங்கள் வீதம் தினமும் 4-5 முறைகள் செய்வது மிக நல்லது. இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரமும் செய்யலாம்.

மூட்டு முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்

 • இந்த முத்திரை நமது மூட்டுக்களில் உள்ள வாதத்தையும் ஈரம் அற்ற தன்மையையும் குறைக்கிறது.
 • மூட்டுகளுக்கு அதிக சக்தி கொடுக்கிறது.
 • மூட்டுவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
 • இந்த முத்திரை மூட்டுக்களில் உள்ள மஜ்ஜைகள், மற்றும் தசை நார்கள்களில் பாதிப்பு இருந்தால் அதற்கு சக்தி கொடுத்து குணப்படுத்துகிறது.
 • இன்று பெரும்பாலும் கம்ப்யூட்டரில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். இதனால் நமது முழங்கை, மனிக்கட்டு, விரல்கள், மூட்டுக்கள் விரைப்புத்தன்மை அடைந்து வலியில் அவதிப்படுகிறார்கள். இந்த முத்திரை பயிற்சியினால் அதிக சக்தி மூட்டுக்களுக்கு கிடைக்கிறது. அதனால் வலியிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கிறது.
 • நாம் அதிக வேலை செய்யும்போதோ அல்லது அதிக தூரம் நடந்து சென்றாலோ ஏற்படும் மூட்டுவலி தசைவலிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
 • இந்த முத்திரை வயதானவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்த முத்திரை பயிற்சியை தொடர்ந்து செய்துவந்தால் மூட்டுக்களுக்கு அதிக சக்தி கிடைக்கும்.
   
நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம்.
நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது.

Picture
தன்னம்பிக்கை முத்திரை (AHAMKARA MUDRA)

இந்த தன்னம்பிக்கை முத்திரை என்ற அஹம்கார முத்திரை ஒரு சக்தி வாய்ந்த முத்திரை. இது நமக்கு ஒரு உறுதியையும் நம்பிக்கையையும் தருகிறது. அஹம்கார என்பது சமஸ்கிருத சொல். அதில் இந்த சொல்லுக்கு சுயநலம், வீண்தற்பெருமை, தன்னைப்பற்றியே நினைப்பது என்று பொருள் சொல்கிறது.

தன்னம்பிக்கை முத்திரை செய்முறை பயிற்சி

இந்த முத்திரை இரண்டு கைகளாலும் செய்வது நல்லது. இது தியானத்தின் போது செய்தால் மிக நல்ல பலனை தரும்.

நமது கையின் ஆள்காட்டி விரலை இலேசாக வளைத்துக்கொள்ளவும். நமது பெருவிரல் மேல்பாகத்தை ஆள்காட்டி விரலின் நடுப்பாகத்தில் வைத்துக்கொள்ளவும். இலேசாக அழுத்தம் கொடுக்கவும். மற்ற விரல்களை நேராக வைத்துக்கொள்ளவும். இதை இரண்டு கைகளிலும் செய்வது நல்லது.

இந்த முத்திரை பயிற்சியின்போது நாம் நல்ல மூச்சுப்பயிற்சியில் அதாவது சுவாசம் மெதுவாகவும் சீராகவும் இருக்கவேண்டும். இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரமும் எந்த இடத்திலும் செய்யலாம். இந்த முத்திரை பயிற்சியை நின்றநிலையிலோ அல்லது அமர்ந்த நிலையிலோ செய்யலாம்.

இரண்டு கைகளிலும் செய்யவேண்டும். மூச்சுப்பயிற்சி நன்றாக இருக்கவேண்டும். சீரான சுவாசம் அவசியம். குறைந்தது 10 நிமிடங்கள் வீதம் தினமும் 2-3 முறைகள் செய்வது மிக நல்லது. இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரமும் செய்யலாம்.

தன்னம்பிக்கை முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்

•    மனதில் உள்ள தேவையற்ற பயம் நீங்கும்.
•    மனதிற்கு அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்.
•    தன்னம்பிக்கை அதிகமாகும்.
•    நாம் திறமையுடன் நமது வேலைகளை செய்யமுடியும்.
•    நாம் எந்த கஷ்டமான காரியங்களையும் பயமின்றி எதிர்கொள்ள முடியும்.
•    நாம் தைரியமாக நல்ல முறையில் அனைத்து வேலைகளையும் செய்யமுடியும்.
•    உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறும்.
•    மாணவர்கள் தேர்வு சமயத்தில் இந்த முத்திரை பயிற்சி செய்தால் தேர்வு பயம் நீங்கி தன்னம்பிக்கை உருவாகும். நன்றாக தேர்வு எழுத இயலும்.
•    அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு செல்பவர்கள் தினமும் காலை இந்த முத்திரை பயிற்சி செய்தால் பயம் நீங்கி வேலைகளை திறம்பட செய்யமுடியும்.