பூஷன் முத்திரை - PUSHAN MUDRA
(This mudra increase our immunity power & remove toxins from our body)
(இந்த முத்திரை பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொடுக்கிறது.)

Picture
பூஷன் முத்திரை 
(இந்த முத்திரை பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொடுக்கிறது.)

கை விரல்கள் முத்திரை பயிற்சி மூலம், பிரபஞ்சத்திலிருந்து சக்தியை உடலுக்குள் செலுத்துகின்றன. கை விரல்களின் நுனிகள் ஒன்றோடொன்று தொடும்போது உடலுக்குள் அதற்குரிய நல்ல சக்தி செலுத்தப்பட்டு நாம் உடல் நோயிலிருந்தும் மன நோயிலிருந்தும் நிவாரணம் பெறுகிறோம். இன்றைய காலத்தில் முத்திரைப் பயிற்சிகள் ஒரு சில முத்திரைகள் தவிர மற்ற அனைத்து முத்திரைகளும் உட்கார்ந்துகொண்டு, நின்றுகொண்டு, படுத்துக்கொண்டு, நடந்துகொண்டு எந்த நேரத்திலும் செய்யலாம். முத்திரை பயிற்சியில் இருக்கும்போது நல்ல மூச்சுப்பயிற்சியும் இருப்பது நல்லது. உட்கார்ந்திருக்கும்போது நன்றாக நிமிர்ந்து உட்கார வேண்டும். படுத்திருக்கும்போது நேராக படுத்திருக்க வேண்டும். நாம் முத்திரைப் பயிற்சியை ஒழுங்காக முறைப்படி செய்துவந்தால் அதற்குரிய நோய்களிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். மருத்துவரிடமிருந்தும் மருந்துகளிடமிருந்தும் விடுதலை கிடைக்கும். முத்திரைப் பயிற்சிகள் அதிகம் இருந்தாலும் அதில் முத்தான முத்திரைகள் பற்றி பார்ப்போம். முத்திரைப் பயிற்சிகள் குறைந்தது 15 நிமிடங்களும் அதிகபட்சம் 45 நிமிடங்கள் வரை செய்யலாம், இங்கு 45 நிமிடங்கள் செய்தால் நோயிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும். சில முத்திரைப்பயிற்சிகளை அந்த நோய் நீங்கியவுடன் தொடர்ந்து அதற்குரிய முத்திரை பயிற்சி செய்வதை நிறுத்திவிடவேண்டும். நாம் இப்பொழுது ஒவ்வொரு முத்திரைகளாக பார்ப்போம்.

இன்று “பூஷன் முத்திரை” பற்றி பார்ப்போம்.
“பூஷன்” என்றால் “சூரியன்” என்று அர்த்தம். இந்த முத்திரை இரண்டு கைகளிலும் இரண்டு விதமாக செய்யவேண்டும்.  
அதாவது வலது கையின் ஆள்காட்டி விரல், மற்றும் நடு விரலின் நுனியும் பெருவிரல் நுனியை தொட்டுக்கொள்ளவேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக வைத்துக்கொள்ளவேண்டும்.
இடது கையின் நடு விரல், மற்றும் மோதிர விரல் நுனியும் பெருவிரல் நுனியை தொட்டுக்கொள்ளவேண்டும். மற்ற ஆள்காட்டி விரலும் சிறுவிரலும் நேராக வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரத்திலும் செய்யலாம். சில நிமிடங்கள் செய்தாலே இது நல்ல பலன் கொடுக்கும். உணவு சாப்பிட்டபின் இந்த முத்திரை பயிற்சி செய்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

இந்த முத்திரை பயிற்சியால் நிலம் காற்று ஆகாயம் பஞ்சபூத சக்திகள் நமது உடலுக்கு அதிகம் கிடைக்கிறது. அதாவது ஒரு கையால் சக்தி பெறப்பட்டு மற்றொரு கையால் சக்தி உடலுக்கு
கொடுக்கப்படுகிறது.

பூஷன் முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:

 •  இந்த முத்திரை பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொடுக்கிறது.
 •  உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.
 •  உடல் உள் உறுப்புகளில் இருக்கும் நஞ்சு (TOXIN) என்று சொல்லப்படும் கெட்ட கழிவுகள் வெளியேறுகிறது.
 •   காற்று சக்தி அதிகம் கிடைப்பதால் நாம் சுறுசுறுப்பாக இயங்கமுடியும்.
 •  நிலத்தின் சக்தி அதிகம் கிடைப்பதால் நமது உடலின் எலும்பு மற்றும் தசைகள் நன்றாக சக்தியுடன் பலமடைகிறது.
 •  நுரையீரல் நன்றாக வேலை செய்து ஆக்ஸிஜனை அதிகமாக பெற்றும் கார்பண்டையாக்ஸைடை முழுவதும் வெளியேற்றியும் நுரையீரல் அதிக சக்தி பெறுகிறது.
 •   உடல் உறுப்புகள் வயிறு, கல்லீரல், மன்னீரல், பித்தப்பை சக்தி பெற்று நன்றாக வேலை செய்கிறது.
 •   நரம்புகள் வலுவடைந்து நரம்பு தளர்ச்சி நீங்குகிறது.
 •  குமட்டல் மற்றும் வாந்தியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
 •  உடலில் வாயுக்கோளாறுகளை நீக்குகிறது.
 •  வயிறு மற்றும் குடல்கள் சக்தி பெற்று அஜீரணத்திலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
 • சாப்பிட்டு அரை மணிநேரம் கழித்து இந்த முத்திரை பயிற்சி செய்தால் நமது உணவு நன்றாக ஜீரணமாகிறது.

நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம்.
நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது.


Picture
PUSHAN MUDRA  
(This mudra increase our immunity power & remove toxins from our body)

    Mudras are effective role play of fingers. When the tips of two or more fingers touch each other, there is positive changes in our body and mind and get relief from many disease both physically and mentally. Mudras can be done in any posture, sitting, standing, walking or lying down and any time and in any place. Only condition is body should be kept relaxed and keep spine erect while doing mudra in sitting posture and straight in lying posture. If we do mudras regularly we can get relief from stress and emotional feelings and maintain good health. We can say good bye to Doctors and Medicines. We will see important mudras and its excellent and effective health benefit. Time duration for every mudras are minimum 15 minutes maximum 45 minutes will result more benefit.  Today we will see “Pushan Mudra”.

    “Pushaan” means “Sun”. The mudra should be performed in both hands in different manner.
In the right hand the tips of the index finger and middle finger should touch the tip of the thumb, the other fingers are extended straight.

In the left hand, middle finger and ring finger tips should touch the tip of the thumb, the other index finger and little finger  are extended straight.

This mudra increases the energies of the 3 elements (Aakash, Wind, and Earth).
Pushan mudra is dedicated to the Sun God and also the God of nourishment. The position of fingers in the mudra signifies accepting and receiving with one hand and letting go with the other. The mudra helps with digestion and elimination too. In addition to that Pushan Mudra helps with elimination by stimulating the brain.

Benefits of Pushan Mudra:
 • Regulates energies in the autonomic nervous system, and get relief from nervous problem.
 • This mudra is a general energy pump, it give more energy to our body.
 • This mudra stimulates the functions of brain.
 • This mudra practice increase our immunity power.
 • This mudra remove toxins from our body.
 • This mudra create more Air energy, and by this practice, we will be more active.
 • Earth energy increases by this Mudra practice and it gives more strength to bone and muscle.
 • By this mudra practice our lungs performs better by getting more oxygen and removing more carbondyoxide, by this our lungs get more energy.
 •  By this mudra practice our internal organs Stomach, Liver, Spleen, Gallbladder get more energy and function more active.
 • This mudra practice remove nausea and vomiting.
 • This mudra practice give relief from Gastric problem.
 • This mudra strengthen stomach and improve digestion and get relief from indigestion.
 • If we practice this mudra 30 minutes after meals, it easily digested and get more energy.

The physical body is made up of Five Elements( Pancha Bootham) namely - Air, Water, Fire, Earth and Aakash.  Imbalance of these elements disrupts the immunity system and causes disease.  Deficiencies in any of these elements can be made up by connecting one part of the body with another in a particular manner through Mudras.                                                    

    Five fingers of each hand represents the five elements. Thumb finger represents Fire, Index finger represents Air, Middle finger represents Akash, Ring finger represents Earth and Little finger represents Water. When a finger representing an element is brought into contact with the thumb, that element is brought into balance. Therefore the disease caused by the imbalance is cured. Mudras start electromagnetic currents within the body which balance various constituting elements and restore health. The joining of fingers creates an effect on the human body.

Do Mudra practice regularly and enjoy disease free life and maintain good health. 


Comments

03/01/2016 4:59am

There is one more version of doing Pooshan Mudra. That is, doing Prana Mudra in right hand and Apana Mudra in left hand . What is the effect of this combination ? Is it not necessary to do both versions of this Mudra? Pl help

Reply
05/01/2016 9:59am

Natural healing is very good and I believe everyone must endeavor to instill it in their lives. Practicing Pushaan Mudra is one of such natural healing. In today’s era where people suffer diverse side effects from medicine, I believe this practice will go a long way to keeping our body free from toxin and other health related issues.

Reply

Please what is being shared on this page? I am sure I will be very interested but I can’t read. I hope the next time I visit I will be able to read and learn something from this page.

ReplyLeave a Reply