தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம் என்ற பாடல் நம் நினைவிற்கு வருகிறது. உண்மை தான் நாம் கடந்த காலத்தில் பெற்ற வலிகள் அனைத்தும் நீங்கி நம் வாழ்வில் தென்றல் சாமரம் வீச,  இனி நாம் நலமுடன் வளமுடன் மகிழ்வுடன் வாழ நமக்கு வித்திடும் நாளே தை முதல் நாள். அந்த நாளை நாம் ஆவலுடன் வரவேற்போம்.

நமது பழைய வீடும் புதிதாய் காண

மாவிலை தோரணம் மஞ்சள் கொத்து

கரும்பு வாயில் நறுமணபூக்கள்

மங்கள இசையில் காலை வேளையில்

வீட்டு வாசலில் மாக்கோலம் இட்டு

குடும்பம் முழுவதும் மகிழ்ச்சியில் திளைக்க

பெண்கள் குழந்தைகள் வாசலில அமர்ந்து

வெங்கலப்பானையை மஞ்சள் கொத்தால்

அலங்காரம் செய்து, மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு

நற்சுவையான சர்க்கரை பொங்கல் பொங்க

பொங்கும் பொங்கலுக்கு குலவை போட்டு

இல்லம் முழுவதும் இன்பம் பொங்கிட

காலை பனியில், ஆதவன் ஒளியில்

குடும்பம் முழுவதும் மகிழ்ச்சியில் திளைத்து

இறைவனை போற்றி இறையருள் பெற்று

இன்று முதல் அனைவரும்

நலமுடன், வளமுடன்,

நோயில்லா வாழ்க்கை, மகிழ்வுடன் வாழ

மன்மத ஆண்டு தை முதல் நாளில்

உங்கள் அன்பான ஆசைகள்

மகிழ்வாய் நிறைவுற,

இறைவனை வேண்டி

எனது அன்பான வாழ்த்துக்கள்.

வாழ்க நலமுடன்

வளமுடன் என்றும் மகிழ்வுடன்.

டாக்டர்.ப.சிவஞானம் MD. (Acu). Ph.D.
 


Comments

You know that sometimes it is very important to have a proper website! That is why maybe writing services can be interesting for you and your wonderful blog.

ReplyLeave a Reply