இந்த தன்னம்பிக்கை முத்திரை என்ற அஹம்கார முத்திரை ஒரு சக்தி வாய்ந்த முத்திரை. இது நமக்கு ஒரு உறுதியையும் நம்பிக்கையையும் தருகிறது. அஹம்கார என்பது சமஸ்கிருத சொல். அதில் இந்த சொல்லுக்கு சுயநலம், வீண்தற்பெருமை, தன்னைப்பற்றியே நினைப்பது என்று பொருள் சொல்கிறது.
தன்னம்பிக்கை முத்திரை செய்முறை பயிற்சி
இந்த முத்திரை இரண்டு கைகளாலும் செய்வது நல்லது. இது தியானத்தின் போது செய்தால் மிக நல்ல பலனை தரும்.
நமது கையின் ஆள்காட்டி விரலை இலேசாக வளைத்துக்கொள்ளவும். நமது பெருவிரல் மேல்பாகத்தை ஆள்காட்டி விரலின் நடுப்பாகத்தில் வைத்துக்கொள்ளவும். இலேசாக அழுத்தம் கொடுக்கவும். மற்ற விரல்களை நேராக வைத்துக்கொள்ளவும். இதை இரண்டு கைகளிலும் செய்வது நல்லது.
இந்த முத்திரை பயிற்சியின்போது நாம் நல்ல மூச்சுப்பயிற்சியில் அதாவது சுவாசம் மெதுவாகவும் சீராகவும் இருக்கவேண்டும். இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரமும் எந்த இடத்திலும் செய்யலாம். இந்த முத்திரை பயிற்சியை நின்றநிலையிலோ அல்லது அமர்ந்த நிலையிலோ செய்யலாம்.
இரண்டு கைகளிலும் செய்யவேண்டும். மூச்சுப்பயிற்சி நன்றாக இருக்கவேண்டும். சீரான சுவாசம் அவசியம். குறைந்தது 10 நிமிடங்கள் வீதம் தினமும் 2-3 முறைகள் செய்வது மிக நல்லது. இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரமும் செய்யலாம்.
தன்னம்பிக்கை முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்
• மனதில் உள்ள தேவையற்ற பயம் நீங்கும்.
• மனதிற்கு அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்.
• தன்னம்பிக்கை அதிகமாகும்.
• நாம் திறமையுடன் நமது வேலைகளை செய்யமுடியும்.
• நாம் எந்த கஷ்டமான காரியங்களையும் பயமின்றி எதிர்கொள்ள முடியும்.
• நாம் தைரியமாக நல்ல முறையில் அனைத்து வேலைகளையும் செய்யமுடியும்.
• உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறும்.
• மாணவர்கள் தேர்வு சமயத்தில் இந்த முத்திரை பயிற்சி செய்தால் தேர்வு பயம் நீங்கி தன்னம்பிக்கை உருவாகும். நன்றாக தேர்வு எழுத இயலும்.
• அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு செல்பவர்கள் தினமும் காலை இந்த முத்திரை பயிற்சி செய்தால் பயம் நீங்கி வேலைகளை திறம்பட செய்யமுடியும்.
நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம்.
நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது.