(நம்மை யாரும் வசியப்படுத்த முடியாது).
அஞ்சலி முத்திரை செய்முறை பயிற்சி:
நமது இரு கைகளையும் ஒன்று சேர்த்து இரண்டு உள்ளங்கைகளும் ஒன்றை ஒன்று தொடுமாறு வைத்துக்கொள்ளவேண்டும். கை விரல்களையும் ஒன்று சேர்த்து வைத்துக்கொள்ளவும். இரண்டு பெருவிரல்களும் மார்புப் பகுதியைத் தொடவேண்டும். வலது கை விரல்கள் இடது கை விரல்களை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். இரண்டு கைகளையும் ஒன்றுசேர்க்கும்போது சிறிது இடைவெளி இருக்கவேண்டும். தலையை சிறிது தாழ்த்தி கண்களை மூடியபடி இருக்கவேண்டும்.
அதாவது இறைவனை வணங்கும்போதும் பெரியவர்களைப் பார்த்து வணங்கும் போதும் இந்த முத்திரையினால் தான் செய்வோம்.
இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் எவ்வளவு நேரமும் செய்யலாம். இந்த முத்திரையை நெஞ்சுக்கு நேராக வைத்துக்கொண்டு முத்திரை பயிற்சி செய்யும்போது கண்களை மூடிக்கொண்டு மூச்சை நன்றாக இழுத்து வெளியே விடவேண்டும். மனம் அமைதி பெறும். உடலுக்கு புத்துணர்ச்சியும் சக்தியும் கிடைக்கும். சில நிமிடங்கள் செய்தாலே இது நல்ல பலன் கொடுக்கும்.
அஞ்சலி முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்
• இந்த முத்திரையின் போது நமது நல்ல எண்ணங்களையும் மற்றவர்களிடம் மரியாதையையும் காட்டுகிறது.
• இந்த முத்திரையை நமது இதயத்திற்கு நேராக வைத்து செய்தால் நமது மனம் அமைதி பெறும்.
• நமது மூளையின் இருபக்கமும் அதாவது வலது இடது பக்க மூளைகளும் அமைதி பெறும்.
• நமது நேர்மையான ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
• மன அழுத்தம் குறையும்.
• உடலின் செயல் திறன், கற்பனைத் திறன் சிறப்பாக செயல்பட்டு புதிய படைப்புகளை உருவாக்கும் ஆற்றல் உண்டாகும்.
• நம்மை யாரும் வசியப்படுத்த முடியாது.
• அனைவரும் நம்மிடம் அன்பாக பழகுவார்கள்.
• இறைவனை வணங்கும்போது இந்த முத்திரையில் தான் வேண்டிக்கொள்கின்றோம்.
• இந்த முத்திரை இறைவனுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிக்கின்றது.
• இந்த முத்திரை பெரியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வணக்கத்தையும் அவர்களால் ஏற்பட்ட நன்மைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைகிறது.
• விரல் நுனிகள் அழுத்தத்துடன் தொடுவதால் நமது உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.
• இந்த முத்திரை பயிற்சியால் நமது உறவினர்களிடம் மகிழ்ச்சியான உறவும் நல்ல நண்பர்களின் தொடர்பும் அதிகரிக்கிறது.
• நமது உள்ளங்கைளில் உடல் உறுப்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகள் இருக்கிறது. அதை அழுத்தும்போது உடல் உறுப்புகள் அனைத்தும் சக்தி பெறுகிறது.
• அனைவரிடமும் மனிதநேயம் நன்றாக ஏற்பட்டு மற்றவர்கள் துன்பப்படும்போது இரக்க உணர்வுடன் உதவும் எண்ணம் மனதில் தோன்றுகிறது.
நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம்.
நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது.