(This mudra develop Noble thoughts and eliminate negative emotions)
We have empty space in so many parts of our body. They are skull, back side of nose, sinus, ear, mouth, throat and stomach. All parts of our body functions smoothly because of this empty space.
Efficiency of other organs increases while practicing Akash mudra. It increase empty space within our body.
We can practice this mudra any time. But if we practice this mudra morning or evening (between 2am-6am or 2pm-6pm) it give more benefits.
Benefits of Aakash Mudra.
- It develop noble thoughts.
- During meditation if we practice Aakash mudra, it leads to highest level in meditation.
- Aakash mudra practice eliminates Negative emotions like fear, anger and increase positive though like happiness and satisfaction.
- If we practice regularly, it detoxify the body by elimination of metabolic waste through exhaled air, sweating, urine and stools.
- Practicing Aakash mudra helps in gaining Extra Sensory Perception- ESP. By practicing this mudra regularly will increase our ESP power.
- By practicing this mudra it overcome the feeling of fullness and heaviness in the body or body parts.
- This mudra practice overcome discomfort caused by over-eating.
- It cures High BP.
- It cure irregular heart beats.
- Aakash mudra practice relieves the congestion in the chest.
- It relieve sinusitis, migraine, ear pain and clear all lung congestion.
- It increase calcium content within the body and give strength to bones.
- If we practice Aakash mudra regularly works as a tool to connect “JEEVATHMA” and “PARAMATHMA”
- This mudra practice should not be performed while walking. Only by sitting this mudra practice should be done.
- If we practice regularly all internal organs in our body are functioning in efficient manner.
The physical body is made up of Five Elements( Pancha Bootham) namely - Air, Water, Fire, Earth and Aakash. Imbalance of these elements disrupts the immunity system and causes disease. Deficiencies in any of these elements can be made up by connecting one part of the body with another in a particular manner through Mudras.
Five fingers of each hand represents the five elements. Thumb finger represents Fire, Index finger represents Air, Middle finger represents Aakash, Ring finger represents Earth and Little finger represents Water. When a finger representing an element is brought into contact with the thumb, that element is brought into balance. Therefore the disease caused by the imbalance is cured. Mudras start electromagnetic currents within the body which balance various constituting elements and restore health. The joining of fingers creates an effect on the human body.
Do Mudra practice regularly and enjoy disease free life and maintain good health.
(உயர்ந்த நல்ல எண்ணங்களை வெளிப்படுத்தும் அருமையான முத்திரை)
நமது பெருவிரல் நுனியும் நடு விரல் நுனியும் தொடும்படியும், மற்ற விரல்கள் நேராக நீட்டியும் வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரத்திலும் செய்யலாம். இந்த முத்திரை பயிற்சி காலை/மாலை 2 மணி முதல் 6 மணிக்குள் எந்த நேரத்தில் செய்தாலும் அதிக பலன் தரும்.
இந்த முத்திரை பயிற்சி உடல் உறுப்புகளின் வெற்றிடத்தை அதிகப்படுத்தி நன்றாக இயங்கச்செய்கிறது. அதாவது நமது மண்டையோடு (கபாலம்), மூக்கின் பின்புறம், சைனஸ் பாதை, காது, வாய், தொண்டை மற்றும் வயிறு பாகங்களில் வெற்றிடம் உள்ளது. தேவையான வெற்றிடம் இருப்பதால் அது நன்றாக இயங்குகிறது. அந்த இடத்தில் அதிகமாக தண்ணீரோ அல்லது காற்றோ அடைத்துக்கொண்டால் அந்த உறுப்புகள் இயங்குவதில் பிரச்சனையும் நோயும் வருகிறது. இந்த முத்திரை பயிற்சி தேவையான வெற்றிடத்தை ஏற்படுத்தி நன்றாக இயங்கவைக்கிறது. இந்த முத்திரை நல்ல எண்ணங்களை மனதில் உருவாக்குகின்றது.
இந்த முத்திரையை உட்கார்ந்து கொண்டு செய்யவேண்டும். நடந்து கொண்டு செய்யக்கூடாது.
ஆகாஷ் முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:
- மனதில் தீய எண்ணங்கள், கெட்ட உணர்ச்சிகள் ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது.
- மனதில் தேவையில்லாமல் ஏற்படும் பயம் கோபம் இவைகளை குறைத்து மனதில் நல்ல எண்ணங்களை ஏற்படுத்தி மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் கொடுக்கிறது.
- இந்த முத்திரை பயிற்சியில் தியானம் செய்தால் மன ஒருமைப்பாட்டுடன் தியானம் முழுமையாக செயல்படும்.
- உயர்ந்த எண்ணங்களை வெளிப்படுத்தும்.
- இந்த முத்திரை பயிற்சி தொடர்ந்து செய்தால் பொது நிலைப்புலன் உணர்வுக்கு அப்பாற்பட்ட முன்னோக்கு தெரியும் சக்தி (ESP- EXTRA SENSORY PERCEPTION) கிடைக்கும்.
- உடலில் உள்ள தேவையற்ற கெட்ட சக்திகள் (TOXIN) வியர்வை, சிறுநீர், மலம் வழியாக வெளியேறும்.
- உடலும் உறுப்புகளும் கனமாக இருப்பது போன்ற நிலைகளை போக்கும்.
- சைனஸ் தொந்தரவுகளை குணப்படுத்தும்.
- தலைவலி மற்றும் காது வலிகளை குணப்படுத்தும்.
- நெஞ்சு கனமாக இருப்பது போன்ற உணர்வுகளை நீக்கும்.
- நெஞ்சு படபடப்பை குறைக்கும்.
- உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
- அதிகமாக சாப்பிட்டதால் ஏற்படும் தொந்தரவுகளை போக்கும்.
- கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் வலுப்பெறும்.
- இந்த முத்திரை பயிற்சியால் உடல் உள் உறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்குகின்றது.
நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம்.
நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது.