Mudras are effective role play of fingers. When the tips of two or more fingers touch each other, there is positive changes in our body and mind and get relief from many disease both physically and mentally. Mudras can be done in any posture, sitting, standing, walking or lying down and any time and in any place. Only condition is body should be kept relaxed and keep spine erect while doing mudra in sitting posture and straight in lying posture. If we do mudras regularly we can get relief from stress and emotional feelings and maintain good health. We can say good bye to Doctors and Medicines. Today we will see important mudra “Surabhi Mudra” and its excellent and effective health benefit.
“Surabhi” means ‘cow’. This mudra is called as “Kamadhenu Mudra”. Kamadhenu is a heavenly cow which give us whatever we ask and request for. Similarly this mudra also helps us to achieve our ambitions. All our dreams and expectation will come true.
The index finger of each hand should touch middle finger of the other hand, the ring finger of each hand should touch the little finger of another hand. The thumb should not touch any finger. It should face our heart. This is Surabhi Mudra.
Perform this mudra 45 min. every day for better result. At least minimum 15 minute. is required. It can be performed at any time. First time it will be difficult to keep this mudra. If we practice regularly this becomes possible and easy to do. This looks like a cow’s udder.
Benefits of Surabhi Mudra:
- If we practice regularly our Digestive organs and metabolic functions of the body will function properly and hence strengthens the digestive system.
- It cures all diseases.
- It activates and strengthens the Solar Plexus(Manipur Chakra) and give more energy.
- It is curative mudra which has power to cure all the three doshas. According to Ayurveda, there are three doshas- Vata, Pitta and Kapha. This mudra is known as “Tridosha naashak”- a destroyer of all three impurities.
- Our internal organs will functions properly.
- It helps to detoxify the system.
- It helps in calming the mind.
- It improve concentration and clarity in mind.
- It cures rheumatoid arthritis.
- It cures abdomen related diseases like Gas, Flatulence and Acidity etc.,
- This mudra practice will activate all endocrine glands in our body and will function properly.
- It activates excretory system and cure urinary diseases.
- Stomach related problems are solved.
- Area around the navel becomes healthy.
- Healthy and strong body is formed.
- Rheumatism, Arthritis problems are cured.
Five fingers of each hand represents the five elements. Thumb finger represents Fire, Index finger represents Air, Middle finger represents Akash, Ring finger represents Earth and Little finger represents Water. When a finger representing an element is brought into contact with the thumb, that element is brought into balance. Therefore the disease caused by the imbalance is cured. Mudras start electromagnetic currents within the body which balance various constituting elements and restore health. The joining of fingers creates an effect on the human body.
Do Mudra practice regularly and enjoy disease free life and maintain good health.
(உடல் உறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்கும்).
கை விரல்கள் முத்திரை பயிற்சி மூலம், பிரபஞ்சத்திலிருந்து சக்தியை உடலுக்குள் செலுத்துகின்றன. கை விரல்களின் நுனிகள் ஒன்றோடொன்று தொடும்போது உடலுக்குள் அதற்குரிய நல்ல சக்தி செலுத்தப்பட்டு நாம் உடல் நோயிலிருந்தும் மன நோயிலிருந்தும் நிவாரணம் பெறுகிறோம். இன்றைய காலத்தில் முத்திரைப் பயிற்சிகள் ஒரு சில முத்திரைகள் தவிர மற்ற அனைத்து முத்திரைகளும் உட்கார்ந்துகொண்டு, நின்றுகொண்டு, படுத்துக்கொண்டு, நடந்துகொண்டு எந்த நேரத்திலும் செய்யலாம். முத்திரை பயிற்சியில் இருக்கும்போது நல்ல மூச்சுப்பயிற்சியும் இருப்பது நல்லது. உட்கார்ந்திருக்கும்போது நன்றாக நிமிர்ந்து உட்கார வேண்டும். படுத்திருக்கும்போது நேராக படுத்திருக்க வேண்டும். நாம் முத்திரைப் பயிற்சியை ஒழுங்காக முறைப்படி செய்துவந்தால் அதற்குரிய நோய்களிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். மருத்துவரிடமிருந்தும் மருந்துகளிடமிருந்தும் விடுதலை கிடைக்கும். நாம் இப்பொழுது “சுரபி முத்திரை அதன் நல்ல பலன்கள்” பற்றி பார்ப்போம்.
“சுரபி முத்திரை” ஒரு அற்புதமான முத்திரை. சுரபி என்றால் பசு என்று அர்த்தம். இந்த முத்திரை உடலுக்கு சக்தியையும் ஆரோக்கியத்தையும், மன மகிழ்ச்சியையும் கொடுப்பதால் இதை "காமதேனு முத்திரை" என்றும் சொல்லப்படும்.
இந்த முத்திரை பயிற்சி முதலில் மிகவும் சிரமமாக இருக்கும். சில நாள் பழக்கத்தில் எளிதாகிவிடும்.
இரண்டு கை விரல்களையும் நேராக வைத்துக்கொள்ளவும். முதலில் இடது கை மோதிர விரல் நுனியை வலது கை சுண்டு விரலின் நுனியுடன் தொட்டுக்கொள்ளுங்கள். வலது கை மோதிர விரல் நுனி இடது கை சுண்டு விரல் நுனியை தொட்டுக்கொள்ளவேண்டும். பின் இடது கை ஆள்காட்டி விரல் நுனியுடன் வலது கை நடுவிரல் நுனியை தொட்டுக்கொள்ளவும். அதேபோல் வலது கை ஆள்காட்டி விரல் நுனியை இடது கை நடுவிரல் நுனியுடன் தொட்டுக்கொள்ளவும். இரண்டு கை பெருவிரலையும் நேராக வைத்துக்கொள்ளவும். படத்தில் விவரமாக காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரத்திலும் செய்யலாம். சில நிமிடங்கள் செய்தாலே இது நல்ல பலன் கொடுக்கும்.
முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:
- இந்த முத்திரை பயிற்சி செய்துவந்தால் நமது ஜீரண உறுப்புகள் நன்றாக வேலை செய்யும்.
- நமது உயிர் சக்தி (சோளார் பிளக்ஸஸ்) நன்றாக இயங்கும்.
- ஆயுர்வேத மருத்துவ முறைப்படி சொல்லப்படும் வாத பித்த கப நோய்கள் நீங்கும்.
- உடல் உள் உறுப்புகள் நன்றாக இயங்கும்.
- உடலில் உள்ள அனைத்து நச்சு தன்மைகளும் நீங்கும்.
- உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும்.
- மன குழப்பங்கள் நீங்கி மனம் அமைதிப்படும்.
- மன ஒருமைப்பாடு கிடைக்கும்.
- மூட்டுகளில் உள்ள வலி தசை பிடிப்பு நீங்கும்.
- நெஞ்செரிச்சல் நீங்கும்.
- வயிற்றில் உள்ள வாயு தொந்தரவுகள் நீங்கும்.
- உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் நன்றாக வேலை செய்யும்.
- உடலில் உள்ள கழிவு உறுப்புகள் நன்றாக வேலை செய்யும்.
- சிறுநீரக நோய்கள் நீங்கி சிறுநீரகம் நன்றாக வேலை செய்யும்.
- மொத்தத்தில் உடல் உறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்கும்.
- உடலின் பஞ்ச பூத சக்திகள் ( நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) சம நிலை அடைந்து உடல் ஆரோக்கியமாகவும், மனம் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம்.
நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது.