Guru Acupuncture & Alternative Medicine
Follow us
  • Home
  • Acupuncture & Acupressure
  • Alternative Medicine
  • Blog
  • Events
  • About Dr

Acupuncture Classes @ KUMARAN’S HEALTH CENTRE

6/3/2016

Picture

அக்குபங்க்சர் மருத்துவ பயிற்சி வகுப்புகள் @ குமரன்’ஸ் ஹெல்த் செண்டர்

6/3/2016

Picture

அஞ்சலி முத்திரை (ANJALI MUDRA)

6/1/2016

Picture
அஞ்சலி முத்திரை (ANJALI MUDRA)
(நம்மை யாரும் வசியப்படுத்த முடியாது).

அஞ்சலி முத்திரை செய்முறை பயிற்சி
:
நமது இரு கைகளையும் ஒன்று சேர்த்து இரண்டு உள்ளங்கைகளும் ஒன்றை ஒன்று தொடுமாறு வைத்துக்கொள்ளவேண்டும். கை விரல்களையும் ஒன்று சேர்த்து வைத்துக்கொள்ளவும். இரண்டு பெருவிரல்களும் மார்புப் பகுதியைத் தொடவேண்டும். வலது கை விரல்கள் இடது கை விரல்களை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். இரண்டு கைகளையும் ஒன்றுசேர்க்கும்போது சிறிது இடைவெளி இருக்கவேண்டும். தலையை சிறிது தாழ்த்தி கண்களை மூடியபடி இருக்கவேண்டும்.

அதாவது இறைவனை வணங்கும்போதும் பெரியவர்களைப் பார்த்து வணங்கும் போதும் இந்த முத்திரையினால் தான் செய்வோம்.

இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் எவ்வளவு நேரமும் செய்யலாம். இந்த முத்திரையை நெஞ்சுக்கு நேராக வைத்துக்கொண்டு  முத்திரை பயிற்சி செய்யும்போது கண்களை மூடிக்கொண்டு மூச்சை நன்றாக இழுத்து வெளியே விடவேண்டும். மனம் அமைதி பெறும். உடலுக்கு புத்துணர்ச்சியும் சக்தியும் கிடைக்கும். சில நிமிடங்கள் செய்தாலே இது நல்ல பலன் கொடுக்கும்.

அஞ்சலி முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்

•    இந்த முத்திரையின் போது நமது நல்ல எண்ணங்களையும் மற்றவர்களிடம் மரியாதையையும் காட்டுகிறது.
•    இந்த முத்திரையை நமது இதயத்திற்கு நேராக வைத்து செய்தால் நமது மனம் அமைதி பெறும்.
•    நமது மூளையின் இருபக்கமும் அதாவது வலது இடது பக்க மூளைகளும் அமைதி பெறும்.
•    நமது நேர்மையான ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
•    மன அழுத்தம் குறையும்.
•    உடலின் செயல் திறன், கற்பனைத் திறன் சிறப்பாக செயல்பட்டு புதிய படைப்புகளை உருவாக்கும் ஆற்றல் உண்டாகும்.
•    நம்மை யாரும் வசியப்படுத்த முடியாது.
•    அனைவரும் நம்மிடம் அன்பாக பழகுவார்கள்.
•    இறைவனை வணங்கும்போது இந்த முத்திரையில் தான் வேண்டிக்கொள்கின்றோம்.
•    இந்த முத்திரை இறைவனுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிக்கின்றது.
•    இந்த முத்திரை பெரியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வணக்கத்தையும் அவர்களால் ஏற்பட்ட நன்மைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைகிறது.
•    விரல் நுனிகள் அழுத்தத்துடன் தொடுவதால் நமது உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.
•    இந்த முத்திரை பயிற்சியால் நமது உறவினர்களிடம் மகிழ்ச்சியான உறவும் நல்ல நண்பர்களின் தொடர்பும் அதிகரிக்கிறது.
•    நமது உள்ளங்கைளில் உடல் உறுப்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகள் இருக்கிறது. அதை அழுத்தும்போது உடல் உறுப்புகள் அனைத்தும் சக்தி பெறுகிறது.
•    அனைவரிடமும் மனிதநேயம் நன்றாக ஏற்பட்டு மற்றவர்கள் துன்பப்படும்போது இரக்க உணர்வுடன் உதவும் எண்ணம் மனதில் தோன்றுகிறது.

நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம்.
நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது.

மூட்டு முத்திரை (JOINT MUDRA)

6/1/2016

Picture
மூட்டு முத்திரை (JOINT MUDRA)

மூட்டு முத்திரை செய்முறை பயிற்சி

நமது வலது கை பெருவிரல் நுனியும் மோதிர விரல் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளவேண்டும். அதேபோல் நமது இடது கை பெருவிரல் நுனியும் நடுவிரல் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளவேண்டும். இதற்கு மூட்டு முத்திரை அல்லது ஜாயிண்ட் முத்திரை என்று பெயர்.

இந்த முத்திரை பிரித்வி முத்திரை மற்றும் ஆகாஷ் முத்திரைகளின் பலன்களை கொடுக்கிறது.

இந்த முத்திரையை எந்த நிலையிலும் செய்யலாம். உட்கார்ந்து கொண்டோ, நின்றுகொண்டோ, நடந்து கொண்டோ செய்யலாம்.
இரண்டு கைகளிலும் செய்யவேண்டும். மூச்சுப்பயிற்சி நன்றாக இருக்கவேண்டும். சீரான சுவாசம் அவசியம். குறைந்தது 15 நிமிடங்கள் வீதம் தினமும் 4-5 முறைகள் செய்வது மிக நல்லது. இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரமும் செய்யலாம்.

மூட்டு முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்

  • இந்த முத்திரை நமது மூட்டுக்களில் உள்ள வாதத்தையும் ஈரம் அற்ற தன்மையையும் குறைக்கிறது.
  • மூட்டுகளுக்கு அதிக சக்தி கொடுக்கிறது.
  • மூட்டுவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
  • இந்த முத்திரை மூட்டுக்களில் உள்ள மஜ்ஜைகள், மற்றும் தசை நார்கள்களில் பாதிப்பு இருந்தால் அதற்கு சக்தி கொடுத்து குணப்படுத்துகிறது.
  • இன்று பெரும்பாலும் கம்ப்யூட்டரில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். இதனால் நமது முழங்கை, மனிக்கட்டு, விரல்கள், மூட்டுக்கள் விரைப்புத்தன்மை அடைந்து வலியில் அவதிப்படுகிறார்கள். இந்த முத்திரை பயிற்சியினால் அதிக சக்தி மூட்டுக்களுக்கு கிடைக்கிறது. அதனால் வலியிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கிறது.
  • நாம் அதிக வேலை செய்யும்போதோ அல்லது அதிக தூரம் நடந்து சென்றாலோ ஏற்படும் மூட்டுவலி தசைவலிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • இந்த முத்திரை வயதானவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்த முத்திரை பயிற்சியை தொடர்ந்து செய்துவந்தால் மூட்டுக்களுக்கு அதிக சக்தி கிடைக்கும்.
   
நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம்.
நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது.

தன்னம்பிக்கை முத்திரை (AHAMKARA MUDRA)

6/1/2016

Picture
தன்னம்பிக்கை முத்திரை (AHAMKARA MUDRA)

இந்த தன்னம்பிக்கை முத்திரை என்ற அஹம்கார முத்திரை ஒரு சக்தி வாய்ந்த முத்திரை. இது நமக்கு ஒரு உறுதியையும் நம்பிக்கையையும் தருகிறது. அஹம்கார என்பது சமஸ்கிருத சொல். அதில் இந்த சொல்லுக்கு சுயநலம், வீண்தற்பெருமை, தன்னைப்பற்றியே நினைப்பது என்று பொருள் சொல்கிறது.

தன்னம்பிக்கை முத்திரை செய்முறை பயிற்சி

இந்த முத்திரை இரண்டு கைகளாலும் செய்வது நல்லது. இது தியானத்தின் போது செய்தால் மிக நல்ல பலனை தரும்.

நமது கையின் ஆள்காட்டி விரலை இலேசாக வளைத்துக்கொள்ளவும். நமது பெருவிரல் மேல்பாகத்தை ஆள்காட்டி விரலின் நடுப்பாகத்தில் வைத்துக்கொள்ளவும். இலேசாக அழுத்தம் கொடுக்கவும். மற்ற விரல்களை நேராக வைத்துக்கொள்ளவும். இதை இரண்டு கைகளிலும் செய்வது நல்லது.

இந்த முத்திரை பயிற்சியின்போது நாம் நல்ல மூச்சுப்பயிற்சியில் அதாவது சுவாசம் மெதுவாகவும் சீராகவும் இருக்கவேண்டும். இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரமும் எந்த இடத்திலும் செய்யலாம். இந்த முத்திரை பயிற்சியை நின்றநிலையிலோ அல்லது அமர்ந்த நிலையிலோ செய்யலாம்.

இரண்டு கைகளிலும் செய்யவேண்டும். மூச்சுப்பயிற்சி நன்றாக இருக்கவேண்டும். சீரான சுவாசம் அவசியம். குறைந்தது 10 நிமிடங்கள் வீதம் தினமும் 2-3 முறைகள் செய்வது மிக நல்லது. இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரமும் செய்யலாம்.

தன்னம்பிக்கை முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்

•    மனதில் உள்ள தேவையற்ற பயம் நீங்கும்.
•    மனதிற்கு அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்.
•    தன்னம்பிக்கை அதிகமாகும்.
•    நாம் திறமையுடன் நமது வேலைகளை செய்யமுடியும்.
•    நாம் எந்த கஷ்டமான காரியங்களையும் பயமின்றி எதிர்கொள்ள முடியும்.
•    நாம் தைரியமாக நல்ல முறையில் அனைத்து வேலைகளையும் செய்யமுடியும்.
•    உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறும்.
•    மாணவர்கள் தேர்வு சமயத்தில் இந்த முத்திரை பயிற்சி செய்தால் தேர்வு பயம் நீங்கி தன்னம்பிக்கை உருவாகும். நன்றாக தேர்வு எழுத இயலும்.
•    அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு செல்பவர்கள் தினமும் காலை இந்த முத்திரை பயிற்சி செய்தால் பயம் நீங்கி வேலைகளை திறம்பட செய்யமுடியும்.

நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம்.
நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது.

Aakaash Mudra ஆகாஷ் முத்திரை

6/1/2016

Picture
தர்மசக்கரம் முத்திரை (DHARMA CHAKRA)    
    இந்து சமயத்தில் தர்ம சக்கரம் என்பது வாழ்க்கை சக்கரத்தில் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுப்பது மற்றும் அதை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துவது பற்றியும் விளக்கமாக கூறுகின்றது. நாம் இந்த முத்திரை பயிற்சியின்போது கைகளின் விரல்களை இரண்டு சக்கரங்கள் வடிவில் வைத்துக்கொள்கின்றோம். இந்த தர்மசக்கரம் தர்மம் சம்பந்தமான போதனைக்கு அடையாளமாக உள்ளது.

நமது வாழ்க்கை சக்கரம் அதாவது நாம் பிறப்பிலிருந்து இறப்பு வரையும் நம் வாழ்க்கையில் நமக்கு வேறுபட்ட சூழ்நிலைகளில் பலவித அனுபவங்களைக் காட்டும் வழிகாட்டியாக உள்ளது. இடது கை நடுவிரல் சனிபகவானை குறிக்கின்றது. இறப்பு மற்றும் பிறப்புக்கு அடையாளமாக உள்ளது.

நமது இடது கை இருதயத்தை நோக்கி வைத்திருப்பது நமது உடல் உள் உறுப்புகளை குறிக்கிறது. வெளிப்பக்கமாக காட்டும் நமது வலது கை வெளி உலகத்தை குறிக்கின்றது. அதாவது நமது உடலின் உட்புறமும் வெளிப்புறமும் நல்ல சக்தியுடன் இணக்கமாக இருக்கவேண்டும் என்று பொருள். இந்த தர்ம சக்கரம் முத்திரை பயிற்சி நமது உள்ளமும் உடலும் நல்ல சக்தியுடன் இயங்குவதற்கு உதவுகின்றது.

தர்மசக்கரம் முத்திரை செய்முறை பயிற்சி

நாம் இந்த முத்திரை பயிற்சியின்போது நமது இரு கை விரல்களையும் இருதயத்திற்கு நேராக வைத்துக்கொள்ளவேண்டும். அதாவது நமது வலது கை இடது கைக்கு சிறிது மேலாக இருக்கவேண்டும். இரு கைகளிலும் பெருவிரல் நுனியையும் ஆள்காட்டி விரல் நுனியையும் ஒன்று சேர்த்துக்கொள்ளவேண்டும். இது ஒரு வட்டமாக காட்ச்சியளிக்கும். நமது இடது உள்ளங்கை நமது இருதயத்தை நோக்கி பார்க்குமாறு வைத்துக்கொள்ளவேண்டும். வலது கையின் பின்புறம் இருதயத்தை நோக்கி இருக்கவேண்டும். நமது இடது கையின் நடுவிரலை வலது கையின் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனியுடன் தொட்டுக்கொள்ளவேண்டும். மற்ற விரல்கள் நீட்டிய நிலையில் தளர்வாக இருக்கவேண்டும்.

இந்த முத்திரை பயிற்சியின்போது நாம் நல்ல மூச்சுப்பயிற்சியில் அதாவது சுவாசம் மெதுவாகவும் சீராகவும் இருக்கவேண்டும். இந்த மூன்று விரல் நுனியும் தொட்டுக்கொள்வதை பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரமும் எந்த இடத்திலும் செய்யலாம். இந்த முத்திரை பயிற்சியை நின்றநிலையிலோ அல்லது அமர்ந்த நிலையிலோ செய்யலாம்.

இரண்டு கைகளிலும் செய்யவேண்டும். மூச்சுப்பயிற்சி நன்றாக இருக்கவேண்டும். சீரான சுவாசம் அவசியம். குறைந்தது 15 நிமிடங்கள் வீதம் தினமும் 2-3 முறைகள் செய்வது மிக நல்லது. இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரமும் செய்யலாம்.

தர்மசக்கரம் முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்

•    இந்த முத்திரை பயிற்சி நமது உடலுக்கும் மனதிற்கும் நல்ல சக்தியை தரும்.
•    மனக்குழப்பம், மனசஞ்சலம் நீங்கி மன அமைதி கிடைக்கும்.
•    நல்ல சிந்தனைகள் உருவாகும்.
•    மனதில் தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உருவாகும்.
•    வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை ஏற்படும்.
•    மன ஒருமைப்பாடு உண்டாகும்.
•    நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அன்பு பாசம் அதிகரிக்கும்.
•    நமது செயல்பாடுகள் நம்பிக்கையுடன் இருக்கும்.
•    நமக்கு ஒரு பேரின்ப நிலை உண்டாகும்.
•    மனதில் எப்பொழுதும் மகிழ்ச்சி சந்தோஷம் இருக்கும்.
•    மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்படும்.
•    உடலுக்கும் உள்ளத்திற்கும் அண்டவெளியில் இருக்கும் நல்ல சக்தி அதிகமாக கிடைக்கும்.
தர்ம சக்கர முத்திரையை தொடர்ந்து செய்துவந்தால் நமது செயல்பாடுகள் மற்றும் மன நிலையில் நல்ல மாற்றம் ஏற்படுவது உறுதி.

நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம்.
நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது.    

Jal-Shaamak Mudra (ஜல ஷாமக் முத்திரை)

6/1/2016

Picture
Jal-Shaamak Mudra (ஜல ஷாமக் முத்திரை)
 
(உடலின் அதிகமான நீரை குறைக்கும் முத்திரை)
(பெண்களுக்கு மாதவிடாயின்போது அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் அருமையான முத்திரை)

 நமது சிறுவிரலை பெருவிரலின் அடிப்பாகத்தில் தொடும்படி வைத்து பெருவிரலை வைத்து படத்தில் காட்டியுள்ளபடி இலேசாக அழுத்தவேண்டும். மற்ற விரல்களை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த முத்திரை வருண முத்திரைக்கு எதிர்மறையான முத்திரையாகும். வருண முத்திரை உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து சமநிலைப்படுத்தும். இந்த முத்திரை உடலில் உள்ள அதிக நீரை குறைத்து சமநிலைப்படுத்தும்.
இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரத்திலும் செய்யலாம்.

முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:

  • உடலில் உள்ள நீர்கட்டிகளை (OEDEMA) குணப்படுத்தும்.
  • உடலில் உள்ள அதிக நீரை குறைக்கும்.
  • கண்களில் நீர் நிறைந்து இருப்பதை குறைக்கும்
  • மூக்கிலிருந்து நீர் வடிவதை குறைக்கும்.
  • அதிகமாக வாயில் எச்சில் வருவதை குறைக்கும்.
  • வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும்.
  • பெண்களுக்கு மாதவிடாயின்போது அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.
  • வயிற்றில் செரியாமையினால் ஏற்படும் அமிலத்தன்மையை குறைக்கும்.
  • நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்தும்.
  • நுரையிரலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும்.
  • நெஞ்சு படபடப்பு,  அதிக காய்ச்சலை குணப்படுத்தும்.
  • உடலில் தேவைக்கு அதிகமாக ஹார்மோன் சுரக்காமல் கட்டுப்படுத்தும்.
  • மூளை மற்றும் தண்டுவடத்தில் அதிக திரவம் (CEREBROSPINAL FLUID) சேர்வதால் ஏற்படும் ( HYDROCEPHALOUS) தலை நீர் தேக்க நோயை குணப்படுத்தும்.
  • மூட்டழற்சி நீங்கும்
  • ஆண்களுக்கு ஏற்படும் விரை வாதம் நீங்கும்.
  • மூளையில் ஏற்படும் நீர்த்தேக்கம் நீங்கும்.
  • சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் அழற்சி நீங்கி சிறுநீர் சிரமமில்லாமல் வெளியேறும்.
  • உடலில் ஏற்படும் அதிக குளிர்ச்சி தன்மை நீங்கும்.
  • வாதநோய்களை குணப்படுத்தும்.

நோய் குணமானவுடன் பயிற்சியை தொடர்ந்து செய்வதை நிறுத்திவிடவேண்டும்.

நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம்.
நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது.

உதான் முத்திரை (UDHAN MUDRA)

6/1/2016

Picture
உதான் முத்திரை (UDHAN MUDRA)
(நன்றாக பேசும் சக்தியும் குரல் வளமும் நன்றாக செயல்படுகிறது).

இந்த முத்திரை உதான சக்தியை அதிகம் கொடுக்கிறது. அதாவது யோக சாஸ்திரத்தில் 5 வகையான சக்தி உள்ளது. அவைகள் பிராண சக்தி, அபான சக்தி, உதான சக்தி, சமான சக்தி, வியான சக்தி என்று 5 சக்திகள் உள்ளன. இதில் உதான சக்தி தலைக்கும் தொண்டைக்கும் இடையே உள்ள நடுப்பகுதியில் உள்ளது. இது தொண்டைப்பகுதியை பாதுகாக்கிறது.

உதான் முத்திரை செய்முறை:

நமது கை விரல்களை குவித்து அதாவது பெருவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல், மோதிரவிரல் ஆகிய 4 விரல்களின் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு சிறு விரலை நேராக நீட்டிக்கொள்ளவேண்டும். இதுதான் உதான் முத்திரை

உதான் முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்

•    இந்த முத்திரை பயிற்சியால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கிறது.
•    உடலின் மேல் தோலுக்கு அதிக சக்தி கிடைத்து பளபளப்பாக இருக்கும்.
•    தோல் சம்பந்தமான வியாதிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
•    உடலின் அனைத்து உறுப்புகளும் சக்தியுடன் விளங்கும்.
•    இந்த முத்திரை பயிற்சியால் நெஞ்சு பகுதியிலிருந்து வயிற்றுப்பகுதி வரை சக்தியுடன் பாதுக்காக்கிறது.
•    இருமல் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
•    தொண்டையில் ஏற்படும் நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
•    தைராய்டு அதிகம் சுரப்பது தைராய்டு குறைவாக சுரப்பது போன்ற இரு நோய்களிலிருந்தும்  நிவாரணம் கிடைக்கிறது.
•    இந்த முத்திரை பயிற்சியால் திக்கி திக்கி பேசுவதிலிருந்தும், பேச்சு சரிவராமல் இருப்பதிலிருந்தும் நிவாரணம் கிடைத்து நன்றாக பேசும் சக்தியும் குரல் வளமும் நன்றாக செயல்படுகிறது.
•    சிறுநீரகத்தில் ஏற்படும் குறைபாடுகள் நீங்குகிறது.
•    சுவாச மண்டலத்தின் சக்தி அதிகரித்து சுவாச கோளாறுகள் நீங்குகிறது.
•    கை கால்களுக்கு அதிக வலு கிடைக்கிறது.

இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் செய்யலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் செய்யலாம். எவ்வளவு அதிக நேரம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அதற்குரிய நோயிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கிறது.

நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம்.
நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது.

சி முத்திரை (TSE MUDRA)

6/1/2016

Picture
சி முத்திரை (TSE MUDRA)
(துரதிருஷ்டம் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாகும்)

இது ஒரு அற்புதமான முத்திரை. இது இல்லத்திலும் உள்ளத்திலும் துரதிருஷ்டத்தை நீக்கி அதிர்ஷ்டத்தை கொடுக்கும் முத்திரை. இந்த முத்திரையை இரு கைகளிலும் செய்யவேண்டும்.

சி முத்திரை செய்முறை:
நாம் உட்கார்ந்து கொண்டு இந்த முத்திரை பயிற்சியை செய்யவேண்டும். நம்து இரண்டு கைகளையும் இரண்டு தொடைகளின் மீது வைத்துக்கொள்ளவேண்டும். பெருவிரலை சிறுவிரலின் அடிப்பகுதியில் வைத்துக்கொள்ளவேண்டும். பெருவிரலைஸ் சுற்றி மற்ற நான்கு விரல்களால் மூடவேண்டும். இப்போது சுவாசப்பயிற்சி செய்யவேண்டும். அதாவது மூக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும். இப்போது "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தை 7 முறை சொல்லவேண்டும். அந்த ஒலி வலது காதில் ஒலிக்கும்போது தலைப்பகுதியை அடையும். இப்பொழுது உள்ளிழுத்த காற்றை மெல்ல வெளியே விடவேண்டும். காற்றை வெளியே விடும்போது கைகளை விரிக்கவேண்டும். நம்முடைய கவலை, பயம், சோகம், துரதிருஷ்டம், தோஷங்கள், மகிழ்ச்சியின்மை ஆகியவைகள் நம்மை விட்டு நீங்கிவிட்டதாக நினைக்கவேண்டும். மீண்டும் இந்த முத்திரையை மேலே கூறியபடி குறைந்த அளவு 7 முறையும் அதிக அளவாக 48 முறையும் செய்யலாம்.

சி முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள் :

  1. இந்த முத்திரை பயிற்சியை ஒழுங்காக செய்தால் கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.
  2. கவலை மற்றும் பயம் நீங்கும்.
  3. இந்த முத்திரை பயிற்சி நமது கெட்ட நேரம், அதிர்ஷ்டமின்மையை போக்கக்கூடியது.
  4. துரதிருஷ்டம் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாகும்.
  5. இந்த முத்திரை உடலுக்கும் மனதிற்கும் ஒரு காந்த சக்தியையும் ஒரு வசீகரத்தையும் கொடுக்கும்.
  6. மனச்சோர்வு நீங்கும்.
  7. நமது சோகங்கள் தோஷங்கள் துக்கங்கள் மறைந்து போகும்.
  8. உடலின் ஆதாரப்பொருளான நீர்ச்சத்து கட்டுப்பாட்டில் இருக்கும்.
  9. மகிழ்ச்சியான உள்ளுணர்வு அதிகரிக்கும்.
  10. மூளையின் சக்தி அதிகரிக்கும்.
  11. மனம் எப்பொழுதும் சந்தோஷத்தில் இருக்கும்.
  12. அதிசய நிகழ்வுகள் உள்ளதிலும் இல்லத்திலும் ஏற்படும்.

இந்த முத்திரை பயிற்சி பத்மாசனத்தில் அமர்ந்தபடி செய்தால் மிகவும் நல்லது. வயதானவர்கள் மற்றும் பத்மாசனத்தில் உட்கார்ந்து செய்ய முடியாதவர்கள் நாற்காலியில் உட்கார்ந்து செய்யலாம். குறைந்தது 7 முறையும் அன்றைய தினத்தில் அதிகபட்சமாக 48 முறையும் செய்யலாம். இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் செய்யலாம்.

நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம்.
நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது.

Yoga for Diabetes

4/5/2016

Picture
Click the link below each asana to learn more about the steps and benefits

Click the links below to learn more about the steps and benefits of each asanas.

Ardha Matsyendrasana

Paschimottanasana

Chakrasana

Vajrasana

Balasana

<<Previous
Forward>>

    Author

    Prof. Dr. P. Sivagnanam   
             
    MD.(Acu)  DAT.(BSS). 
              DBF(London)

    RSS Feed

    Archives

    March 2023
    June 2021
    February 2020
    May 2019
    December 2018
    May 2018
    February 2018
    December 2017
    October 2017
    May 2017
    December 2016
    July 2016
    June 2016
    April 2016
    March 2016
    February 2016
    January 2016
    December 2015
    November 2015
    October 2015
    September 2015
    August 2015
    July 2015
    June 2015
    May 2015
    April 2015
    March 2015
    February 2015
    January 2015
    December 2014
    September 2014
    August 2014
    June 2014
    May 2014
    April 2014
    March 2014
    February 2014
    January 2014
    December 2013
    October 2013
    July 2013
    June 2013
    April 2013
    March 2013
    February 2013
    January 2013
    December 2012

    Categories

    All
    Acupressure
    Acupuncture
    Acu Sports
    Allergies
    Aloe Vera
    Asphyxia
    Asthma
    Back Pain
    Blood Pressure
    Books
    Bronchitis
    Cancer
    Chakra
    Constipation
    Cough
    Courses
    Deafness
    Depression
    Diabetes
    Difficulty In Exhaling
    Difficulty In Speaking
    Digestion
    Disorder Of Ankle Joints
    Ears
    Epilepsy
    Face Massage
    Facial Paralysis
    Fatigue
    Fertility
    First Aid
    Flatulence
    Food Enters Eind Pipe
    Frequent Urination
    Gall Bladder
    Gastritis
    Headache
    Heart
    Heart Attack
    Hernia
    High Blood Pressure
    Home Remedies
    Hypertension
    Immunity
    Impotence
    Inhaling Problem
    Insect Bites
    Insomnia
    Irregular Menses
    Kidney
    Kidney Stones
    Large Intestine
    Liver
    Lungs
    Menses Over Bleeding
    Meridians
    Mudras
    Nasal
    Nausea
    Neck Pain
    Neck Stiffness
    Nose Bleeding
    Olive
    Pain
    Palpitations
    Pancreas
    Paralysis
    Pericardium
    Reflexology
    Respiratory Issues
    Sciatica
    Seminars
    Shoulder Pain
    Siddha
    Sinus
    Skin
    Sleep
    Small Intestine
    Spine
    Spleen
    Stomach
    Stones
    Stress
    Suffocation
    Sun Stroke
    Thyroid
    Toothache
    Travel Sickness
    Triple Warmer
    Ulcer
    Upper Back Pain
    Urge Of Urination
    Urinary Bladder
    Urinary Problem
    Urine Retention
    Voice Loss
    Vomiting
    Weight Loss
    Yoga

Site powered by Weebly. Managed by Bluehost